
READ!
எனக்கு வேண்டும்!
அம்மா எனக்குப் பந்து வேண்டும்!
எந்தப் பந்து வேண்டும்?
எனக்கு அந்தப் பந்து வேண்டும்!
எனக்கு உருண்டையான பந்து வேண்டும்!
எனக்குச் சிவப்பு நிற பந்து வேண்டும்!
இதோ நீ கேட்ட பந்து!
இல்லை எனக்கு இது வேண்டாம்!
ஏன்?
இது பெரியதாக இருக்கிறது!
எனக்குச் சிறிய பந்து தான் வேண்டும்!
ஹா ஹா ஹா!
I want!
Mother! I want a ball
Which ball do you want?
I want that ball!
I want a round ball!
I want a red ball
Here is the ball you asked for!
No, I don’t want it!
Why?
It is big
I want a small ball!
Hahaha!
REFLECT….
இந்த கதையின் மூலம் நீ கற்றுக்கொண்ட புதிய சொற்கள் யாவை?
எடுத்துக்காட்டுகள்: பந்து, உருண்டையான, சிவப்பு, பெரிய, சிறிய
What are some new words that you have learnt from this story?
Examples: Ball, Round, Red, Big, Small
REINVENT?
இந்தச் சொற்களைக் கொண்டு வேறு வாக்கியங்கள் எழுதவோ அல்லது கருத்துகளைக் கூறவோ உன்னால் முடியுமா?
எடுத்துக்காட்டுகள்:
– கடையில் பந்து இருக்கிறது.
– தக்காளி உருண்டையாக இருக்கும்.
– மிளகாய் சிவப்பு நிறத்தில் இருக்கும்.
– இந்தத் தட்டு பெரியதாக இருக்கிறது.
– அந்த எலி சிறியதாக இருக்கிறது.
Can you use these words to say or write different sentences ?
Examples:
There is a ball in the shop.
Tomato is round in shape.
Chili is red in colour.
This plate is big.
That mouse is small.