Tamil short story on child going a park

Tamil short story on child going a park

பூங்காவுக்குப் போகலாம்!

Let’s go to the park!

Boy baby with Mother

 

READ!

ஒரு நாள் நான் அம்மாவோடு பூங்காவுக்குப் போனேன்.

அது என்ன மா?

அது செடி.

அதில் என்ன இருக்கிறது?

அதில் பூ இருக்கிறது!

பூ அழகாக இருக்கிறதே!

பூ மென்மையாக இருக்கிறதே!

பூவில் இதழ்கள் இருக்கின்றனவே!

ஆமாம் அம்மா!

எனக்குப் பூ பிடித்திருக்கிறது!

அதற்குப் பக்கத்தில் என்ன இருக்கிறது?

இதுவா?

இது இலை.

இலை பச்சை நிறத்தில் இருக்கிறது!

இலை விரிந்து இருக்கிறது!

அப்படியா அம்மா? அப்படி என்றால்?

கீழே கிடப்பது என்ன?

அதுவா? அதுவும் இலைத்தான்! காய்ந்த இலை!

காய்ந்த இலை பழுப்பு நிறத்தில் இருக்கிறது.

காய்ந்த இலை சுருங்கி இருக்கிறது.

சரி அம்மா!

 

One day I went to the park with my mum.

What is that mum?

That is a plant.

What is in it?

There is a flower in it.

Flower is beautiful!

Flower is soft!

There are petals on the flower!

Yes mother.

I like flower!

What is beside it?

This?

This is a leaf.

Leaf is green in colour,

Leaf is opened up.

Is it mum? If that’s so?

What is the thing lying below?

That?

That is also a leaf? Dried leaf!

Dried leaf is brown in colour.

Dried leaf has shrunken.

Ok mother.

REFLECT….

இந்தக் கதையிலிருந்து நீ கற்றுக்கொண்ட புதிய சொற்கள் யாவை?

பூங்கா, செடி, பூ, அழகாக, மென்மையாக, இதழ்கள், இலை, பச்சை, விரிந்து, காய்ந்த, பழுப்பு, சுருங்கி

 

What the new words that you have learnt from the strory?

Park, plant, flower, beautiful, soft, petals, leaf, green, opened up, dried, brown, shrunken

 

REINVENT?

நீ கற்றுக்கொண்ட சொற்களைக் கொண்டு வேறு வாக்கியங்களை உருவாக்கு.

Create different sentences using the words that you have learnt.

 

என் வீட்டிற்குப் பக்கத்தில் பூங்கா இருக்கிறது.

நான் தோட்டத்தில் செடி வளர்த்தேன்.

அவள் கடையிலிருந்து பூ வாங்கினாள்.

அந்தப் பெட்டி அழகாக இருக்கிறது,

குழந்தையின் கைகள் மென்மையாக இருக்கின்றன.

அவள் பூவின் இதழ்களை பறித்தாள்.

ஆடு இலையைத் தின்றது.

அவன் குப்பைகளைப் பச்சை நிற வாளியில் வீசினான்.

அப்பா தாளை விரித்து மேசையில் வைத்தார்.

பாட்டி துணிகளை காய வைத்தார்.

இந்த நாற்காலி பழுப்பு நிறத்தில் இருக்கிறது.

தாத்தாவுடைய தோல் சுருங்கி இருக்கிறது.

 

There is a park is beside my house.

I grew plants in the garden,

She bought flower from the shop.

That box is beautiful.

The baby’s hands are soft.

She plucked the petals of the flower.

Goat ate the leaf.

He threw the trash into the green pail.

Father opened up the paper and put on the table.

Grandmother dried the clothes.

This chair is brown in color.

Grandfather’s skin is shrunken.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *