A Butterfly and A Man -Story for All

A Butterfly and A Man -Story for All

An imaginary conversation about life between the two

பட்டாம்பூச்சியும் மனிதனும்!

A medium-length story on a developing positive mindset for older kids, teenagers and people of all ages.

A Butterfly and A Man

READ!

பேராட்டம் அது உனக்குக் கை வந்த கலையோ! பட்டாம்பூச்சியே எப்போதும் மகிழ்ச்சியாய் உள்ளாயே! உன்னால் மட்டும் எப்படி இப்படி இருக்க முடிகிறது?

ஆஹா! நண்பனே நான் கடந்து வந்த பாதையை நீ அறிவாயா? அதற்கு முன்.. உன் முகத்தில் நீ அணிந்திருக்கும் கவலை எனும் முகமூடியை நீக்கிவிடு! சற்று சிரித்துத்தான் பாரேன்?

ஹா! ஹா! போதுமா?

இப்போது எப்படி உணர்கிறாய்?

மனத்திலுள்ள பாரம் குறைந்தது போல் உள்ளது.. ஏ.. என்ன இது? நான் உன்னிடம் கேள்வி கேட்டால் நீ என்னிடம் கேள்வி கேட்கிறாய்?

இரு. சற்று பொறு. உனது கேள்விக்கு நிச்சயம் பதிலுண்டு! முதலில் என் கேள்விக்குப் பதில் சொல்.

ஆமாம்! மனம் இலேசாக இருக்கிறது.

இருக்கிறதா? இதை, இதைத்தான் நான் நானும் கூற விரும்புகிறேன்.

சிரி, சிரித்தால்தான் மனம் இலேசாகும். துன்பமோ பறந்துவிடும்.  வருத்தம் என்பதற்கு இடமில்லை! வாழ்க்கையை எதிர்கொள்ள புத்துணர்ச்சி பிறக்கும். உனக்கு இன்னும் புரியும்படி கூறவா?

சரி.. இப்போது உன் மனம் இலேசானதால் உன் பெயர் மாறியதா? உன் வீடு? உனக்கு இருந்த பிரச்சனை? ஏதாவது மாறியதா?

இல்லை!

ஆனால், உன்னிடம் இப்போது நிம்மதியும் அமைதியும் இருக்கிறது. இதுவரை உனக்குக் கிடைத்துள்ளவற்றுக்கு நீ நன்றியுணர்வோடும் இருக்க பழகிக்கொள்ள வேண்டும். அப்போதுதான் எப்போதும் நிம்மிதியான, மகிழ்ச்சியான மனநிலையை உன்னால் பெற முடியும்! எல்லாம் நமது எண்ணத்தில் உள்ளது.

நாம் வீழ்வதும் எண்ணத்தாலே! உயர்வதும் எண்ணாத்தாலே! மனம் அதைப் பக்குவப்படுத்து! மனம் அதை சாந்தப்படுத்தி, மகிழ்ச்சியாக்கு!

கூட்டிலிருந்து நான் வெளிவர அரும்பாடுபட்டேனே! அதை அறிவாயோ நீ?

நம்பினேன். தனிமையிலிருந்து மீள்வேன் என்று. நம்பினேன். மேம்படுவேன் என்று. பல நாட்களின் தனிமை என்னை வாட்டியபோதும் தளரவில்லை! நம்பினேன், இச்சூழல் கற்றுத் தரும் பாடம் என்னை வாழ்வில் உயர்த்தும் என்று.

இன்று பார்த்தாயா? அழகிய உருவில் இருக்கின்றவாறு உன்னுடன் பேசுகிறேன்! விந்தை அல்லவா வாழ்க்கை! நண்பனே! பிரச்சனை வரும் போகும். ஆனால் என்றும் ஆக்கப்பூர்வமான எண்ணத்தைக் கொண்டிருந்தால், வாழும் காலம் தித்திக்கும்!

REFLECT…

இக்கதையைப் படித்தவுடன் உங்கள் மனத்தில் தோன்றும் எண்ணங்களை ஒரு தாளில் எழுதுங்கள்… உங்களைப் பாதித்த கருத்துகளைப் பற்றிச் சிந்தியுங்கள்..

REINVENT?

உங்கள் எண்ணங்களை எவ்வாறு மாற்றியமைக்கலாம் என்று நினைக்கிறீர்கள்? ஆக்கப்பூர்வமாக எல்லாச் சூழல்களிலும் உங்களால் செயல்பட முடியுமா?

முயன்றால் நிச்சயமாக முடியும்