எங்களுக்கும் உணர்வு உண்டு!
We too have feelings! – An imaginary conversation between an entrance, welcome mat and slippers.
A short tamil story (conversation based) for older kids, teenagers, adults and people of all ages..

READ
வாசல்
முடிவும் நானே! முதலும் நானே!
என்னைக் கடந்து செல்லாதவர் எவரும் இல்லை.
கண் சிமிட்டும் நேரத்திற்குள் தாண்டி செல்லும் மனிதர்களே..
நான் தனிமையில் வாடுகிறேன்!
சற்று திரும்பி பாருங்களேன்!
வரவேற்பு மிதியடி
வரவேற்பு அளிப்பேன்
கால் பதிக்க இடம் தருவேன்!
மாசு படிந்தால் தாங்குவேன்!
நற்சொல் கூறுவேன்!
வீட்டாரைப் பற்றி நல் எண்ணத்தைக் கொடுப்பேன்!
தந்தேன்! எல்லாம் தந்தேன்!
தந்தான்! மிதியடி என்ற பெயரைத் தந்தான்!
செருப்பு
நிழல் என வந்தேன்
அணிபவரது பாரத்தைத் தாங்க வந்தேன்
அவரைக் காக்கும் பாதுகையானேன்
தோற்றத்தை மெருகூட்டும் அலங்காரமானேன்
வெளிச்சத்தின் வருகையால் நீங்குகிறது நிழல்,
பயணம் அதன் முடிவால் நீங்குகிறது நான்.
என் தலை மேல் வைத்தேன், மனிதனை
அவனோ வீட்டிற்கு வெளியே வைத்தான் என்னை
REFLECT
இதைப் படித்த பின் இம்மூன்றைப் பற்றியும் உங்களது எண்ணங்கள் என்ன?
REINVENT
உங்கள் வீட்டில் இருக்கும் ஏதாவது ஒரு பொருளை அல்லது இடத்தைப் பற்றி வேறு கோணத்தில் சிந்தித்துப் பாருங்கள்!
கற்பனை பெருகும்! உங்கள் மனமோ வியந்து மகிழும்!
Also Read: A Butterfly and A Man -Story for All